அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டாா்.ட
அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி நேற்று தெஹ்ரானில் கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் ஐ.ஆர்.என்.ஏ கட்டளை வளாகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காமெனியின் இறப்பு ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும் பெரிய போர் நடவடிக்கைகள்" என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
.ஈரானில் 40 நாட்கள் துக்க காலமும், 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய இலக்குகளுக்கு எதிராக பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கின.பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது .இதில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் புர்ஜ் அல் அரபுமும் அடங்கும்..வான்வெளி மூடப்பட்டதால் , ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை திருப்பி விட்டும் நிறுத்தியும் வைத்துள்ளன .
Tags :













.jpg)





