ரூ.51.42 லட்சம் தங்கம் பறிமுதல்

by Editor / 08-11-2022 08:28:35am
 ரூ.51.42 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் இருந்து 1.15 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நடைபெற்ற சோதனையில் பயணி ஒருவர் உடலில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதன் எடை 1.15 கிலோ என்றும், இதன் மதிப்பு ரூ.51.42 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo