கோரிக்கை மனுக்கள் வழங்க  இரவு 9 மணி முதல் 10 மணி வரை சந்திக்கலாம் குமரிமாவட்ட ஆட்சியர்.

by Editor / 21-02-2025 02:26:08pm
கோரிக்கை மனுக்கள் வழங்க  இரவு 9 மணி முதல் 10 மணி வரை சந்திக்கலாம் குமரிமாவட்ட ஆட்சியர்.

தமிழகத்திலுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சினைக்காக தினமும் மதியம் 3 மணி முதல் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. இந்த நிலையில் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். மதியம் பார்க்க முடியாத பொதுமக்கள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை என்னை சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.தென்காசி ,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வாய்ப்பு கிடைக்கும்  நேரங்களிலெல்லாம் மக்களை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. 

 

Tags : கோரிக்கை மனுக்கள் வழங்க  இரவு 9 மணி முதல் 10 மணி வரை சந்திக்கலாம் குமரிமாவட்ட ஆட்சியர்.

Share via