கல்வி வேலை வாய்ப்புக்காக எஸ் சி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் மற்ற ஜாதியினர்

கல்வி வேலை வாய்ப்புக்காக எஸ் சி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் மற்ற ஜாதியினர் இது குறித்து இன்று சட்டசபையில் , திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி சங்கர், கிரி எழுப்பிய கேள்விக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பதிலளித்தார். அப்பொழுது அரசினுடைய சலுகையை பெறுவதற்காக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டா ரொட்டி என்கிற சாதி சான்றிதழையும் நாயக்கர் ஜாதியை சேர்ந்தவர்கள் காட்டு நாயக்கர் என்று சொல்லப்படுகின்ற ஜாதியை சேர்ந்தர்களுடைய சாதி சான்றிதழ்களையும் கேட்டு விண்ணப்பதாகவும் அரசினுடைய சலுகைகளை பெறுவதற்காக மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் எஸ். சி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க முயல்கிறார்கள் என்றும் உரிய ஆவணங்களை தாக்கல் செய்தவர்களுக்கு ஆய்வின் அடிப்படையில் சாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
Tags :