துபாய் அடுக்குமாடி தீ விபத்து அன்புமணி கோரிக்கை

by Staff / 17-04-2023 01:55:25pm
துபாய் அடுக்குமாடி தீ விபத்து அன்புமணி கோரிக்கை

துபாய் அடுக்குமாடி வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்தனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள பாமக தலைவர் அன்புமணி, துயர செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த இரு தமிழர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories