தொழிலாளர் மண்சரிவில் உயிரிழந்த விவகாரம் - 3பேர் மீது வழக்குப்பதிவு

by Editor / 08-11-2022 08:31:56am
தொழிலாளர் மண்சரிவில் உயிரிழந்த விவகாரம் -  3பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை மாநகராட்சி 2ஆவது வார்டுக்கு உட்பட்ட அசோக்நகர் 2ஆவது தெரு பகுதியில் பாதாளசாக்கடை குழாய் இணைப்பு பணியின்போது மண்சரிவில் சிக்கி  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குப்பன்டபாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளர் சக்திவேல் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தொழிலாளர்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி அஜாக்கிரதையாக பணியில் ஈடுபடுத்தியதாக உயிரிழந்த தொழிலாளர் சக்திவேலின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு.ஒப்பந்த நிறுவனமான ஏ.கே.கன்ஸ்ஸ்ட்ரக்ஷன்  உரிமையாளர் அசோகன் , மேலாளர் சுபாஷ்சந்திரபோஸ்,  சூப்பர்வைசர் ரவிக்குமார் ஆகிய 3பேர் மீது கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories