60 லட்சம் பேர் பதிவு செய்ததால்  முடங்கிய இ-பாஸ் இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது 

by Editor / 07-06-2021 06:59:50pm
60 லட்சம் பேர் பதிவு செய்ததால்  முடங்கிய இ-பாஸ் இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது 


கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டும் இ-பதிவு செய்து பயணம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் மேற்கொண்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுய தொழில் செய்பவர்களும் இ-பதிவு செய்து ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணித்து தங்கள் சுய தொழிலை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி எலக்ட்ரீசியன், பிளம்பர்கள்,கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர், ஹவுஸ் கீப்பிங் போன்ற சுய தொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து சுயதொழில் செய்பவர்கள் இ-பதிவு செய்ய தமிழக அரசின் eregister.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, அடையாள சான்று, முழு முகவரி மற்றும் பயணிக்கும் வாகனத்தை பற்றிய விவரங்கள் போன்றவற்றை கொடுத்தால் பதிவு செய்யப்பட்டு ரசீது வழங்கப்படும். அதனை டவுன்லோட் செய்து காவலர்களிடம் காட்டி தொடர்ந்து பயணித்து தங்கள் சுய தொழிலை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்ட 60 லட்சத்துக்கு ம் அதிகமானோர் விண்ணப்பித்ததால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இ – பதிவு இணையம் முடங்கியது. இதனால் இ-பதிவு பெறும் இணையதள பக்கத்தில் இருந்து சுயதொழில் என்ற பிரிவு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

 

Tags :

Share via