சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து  பிரதமர் மோடி அறிவிப்பு 

by Editor / 30-06-2021 07:47:28pm
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து  பிரதமர் மோடி அறிவிப்பு 



சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு தொடர்பாக  பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து, 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அப்போது, பிளஸ் 2 தேர்வுகளை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. 
அதன்படி 'ஜூலை 15 - ஆக., 26க்குள் தேர்வுகளை நடத்தி, செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம்' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் கோவிட் தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்' என, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. . இந்நிலையில் பிளஸ்டூ தேர்வுகளை ரத்து செய்யலாமா ,வேண்டாமா என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடந்தது. இதில் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத்தேர்வை நடத்த மாற்று வழி உண்டா என்பது குறித்தும், மாநிலங்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ கருத்துக்களையும், பிரதமர் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தோவை ரத்து செய்தும், மே 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த பிளஸ் 2 தேர் வுகளை ஒத்திவைத்தும் சிபிஎஸ்இ அறிவித்தது. மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், ஓரிரு நாள்களில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.இதையடுத்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via