சென்னையில் 8 விமானங்கள் ரத்து

by Staff / 17-10-2024 04:11:26pm
சென்னையில் 8 விமானங்கள் ரத்து

மழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னையில் 8 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அந்தமான், திருச்சி, மதுரை, டெல்லி ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் விமான நிலையத்தில் இன்றும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. விமான பயணிகள் பலர் பாதுகாப்பு கருதி தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டனர்.

 

Tags :

Share via