கர்ப்ப காலத்தில் பெண்கள் நிறைவான ஊட்டச்சத்து அவசியம் !
கர்ப்பம் என்பது ஒரு எளிதான விஷயம் கிடையாது, அது ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இங்கு கர்ப்பமானவர்களுக்கு ஆலோசனை கூறுவதற்கு ஒரு கூட்டமே இருக்கும். அவரது கணவர், குடும்பத்தார், நண்பர்கள் என அனைவரும் அவருக்கும் ஆலோசனை தருகிறார்கள். இதனால் கர்ப்ப காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து ஒரு பெண்ணால் சரியாக முடிவெடுக்க முடிவதில்லை.
இவை குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல் அவை கட்டுக்கதைகளையும் உருவாக்குகின்றன. எனவே ஒருவர் இந்த மாதிரியான விஷயங்களை பின்பற்றும் முன்பு அது எவ்வளவு உண்மை என்பதை அறிய வேண்டும். எனவே கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் தங்கள் உணவில் என்ன சேர்த்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அவற்றை சரியான முறையில் பின்பற்றுவதன் மூலம் நாம் நல்ல உணவுமுறையை பின்பற்ற முடியும்.
சிலர் கர்ப்ப காலத்தில் குறைவான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். அது உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது என அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான விஷயமாகும், இதன் மூலமாக உங்கள் குழந்தை பட்டினி கிடக்கவும் ஆரோக்கிய பிரச்சனையை அனுபவிக்கவும் நீங்கள் காரணமாகிறீர்கள்.
எனவே நீங்கள் குறைவான உணவுகளை உண்பவர்கள் எனில் இப்போதே உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றி அமைப்பது நல்லது, தேசிய அறிவியல் அகாடமியின் அறிக்கையில் கூறியுள்ளபடி சாதாரண மனிதர்களை விடவும் தாய்மார்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக 100 கலோரிகள் தேவைப்படுகின்றன. மேலும் மூன்று மாதங்களுக்கு பிறகு 300 கலோரிகள் தேவைப்படுகிறது. எனவே நீங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் உணவை அதிகமாக்க வேண்டும்.
உணவில் கட்டுப்பாடு தேவைதான், ஏனெனில் மிகவும் அதிகமான உணவு எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை ஏற்படலாம். உடல் அதிகரிப்பு பிரச்சனையானது உங்களை மட்டுமின்றி உங்கள் குழந்தையையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன, எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரியான அளவில் உணவுகள எடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். எனவே தவறான உணவுகளையோ அல்லது அதிக கலோரி (தேவைக்கு அதிகமான அளவு) கொண்ட உணவுகளையோ எடுத்துக்கொள்ள வேண்டாம். நமது கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பு செயல்முறையானது படிபடியாக நிகழ வேண்டும். திடீர் எடை அதிகரிப்பானது இரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொரு நாளும் கூடுதலாக 300 கலோரிகள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Tags :