செயின் பறிப்பில் இறங்கிய கணவர்....அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் மனைவிக்கு மாதம் ரூ.6,000 ஜீவனாம்சம் கொடுக்க பணம் இல்லாததால், கணவர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மன்காபூரில் உள்ள கணபதிநகரில் வசிக்கும் கன்ஹையா நாராயண் பௌராஷி என்பவர், 74 வயது மூதாட்டியின் செயினை பறித்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், கன்ஹையா நாராயண் பௌராஷி கைது செய்யப்பட்டார். விசாரணையில், மனைவிக்கு ஜீவனாம்சம் தர பணம் இல்லாததால் செயினை பறித்தது தெரியவந்துள்ளது.
Tags :