by Staff /
06-07-2023
09:42:30am
மெக்சிகோவின் ஒக்ஸாகா அருகே புதன்கிழமை பயங்கர சாலை விபத்து நடந்தது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தின் காட்சிகள் பஸ்சின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கோர விபத்து தொடர்பாக அந்நாட்டு அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
Tags :
Share via