கல்கி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சில திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை 450 கோடி ரூபாய்க்கும் மேல் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, லைகா பட நிறுவனம் சுபாஷ்கரன் மற்றும் இயக்குனர் இணைந்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியை கல்கி ராஜேந்திரனுக்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
Tags :