100 கோடி நில மோசடி - எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது.
கரூர் மாவட்டம், வாங்கல், காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார்.இவருக்கும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும் நட்பு உள்ளது.இதனிடைய கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கரூர் காவல் நிலையத்தில் தனது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அபகரிக்க முயல்வதாக பிரகாஷ் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதே 100 கோடி ரூபாய் நிலம் தொடர்பாக போலியான ஆவணங்களை பயன்படுத்தியதாக, கரூரில் உள்ள மேல கரூர் பத்திரப்பதிவு அலுவலக பதிவாளரை மிரட்டியதாக எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் மீது பத்திரப்பதிவு பதிவாளர் புகார் அளித்திருந்தார்.இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்து நாள்தோறும் சிபிசிஐடி காவல் நிலையத்தில் எம் ஆர் விஜயபாஸ்கர் கையெழுத்து செய்து வருகிறார்.அவரது சகோதரர் சேகருக்கு முன்ஜாமின் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜாமீன் மறுத்து இன்று தள்ளுபடி செய்ததால், சேகரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :