பீகாரில் ஜேடியு தலைவர் கொடூரமாக படுகொலை

by Staff / 25-04-2024 01:49:58pm
பீகாரில் ஜேடியு தலைவர் கொடூரமாக படுகொலை

ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் சவுரப் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். நேற்றிரவு பீகாரின் பாட்னாவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பர்சா பஜார் கிராமத்தில் 4 ஆசாமிகளால் தலையில் இரண்டு முறை சௌரப் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதனால் சவுரப் இறந்தார். சவுரப் உடன் இருந்த முன்மும் குமார் தாக்கப்பட்டு காயம் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via