அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி.
1988 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை கவுதமி.இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த அவர், 90களில் தென் இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.
1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த கவுதமி, அக்கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக பணியாற்றினார். அப்போது ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வாஜ்பாய்க்காக கவுதமி செய்த பிரச்சாரங்கள் அதிக கவனம் பெற்றன.
மகள் பிறந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அவர் 2017 இல் மீண்டும் பாஜகவில் இணைந்தார். 2021 இல், அவர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக கவுதமி அறிவித்து இருந்தார்.25 ஆண்டுகளாக கட்சிக்கு உறுதியான விசுவாசமாக இருந்தும், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகை கௌதமி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் நடிகை கௌதமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நடிகை கௌதமி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Tags : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி.