மாயமான மீனவர் - முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். யாசர் அலி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tags :