கே.என். நேரு சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்து சென்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில் நேற்று (ஏப்.07) அமலாக்கத் துறை சோதனை நடந்தது. மேலும், கே.என்.நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ED அலுவலகத்தில் கே.என்.ரவிச்சந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :