துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகர் கருணாஸ்

by Staff / 02-06-2024 02:51:27pm
துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய நடிகர் கருணாஸ்

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

Tags :

Share via

More stories