குற்றாலம் மெயினருவி,ஐந்தருவி,சிற்றருவி,புலியருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை மற்றும் நேற்று இரவிலும் கன மழை பெய்தது இம்மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தினுடைய பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக அருவிகளின் நகரம் என போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கூட்டத் தொடங்கியது நேற்று முன்தினம் இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்தது ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் வேடிக்கை பார்த்து சென்ற வண்ணம் இருந்தனர்.இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றாலம் மெயினருவி,ஐந்தருவி,சிற்றருவி,புலியருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.பழைய குற்றாலம் அருவியில் இன்னும் அனுமதியளிக்கவில்லை. இன்னும் சில தினங்களில் சபரிமலை சீசன் தொடங்கப்பட உள்ளதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Tags :