"கலைஞர் 100 " விஜய் - அஜித்-க்கு அழைப்பு

by Staff / 21-11-2023 02:38:37pm

மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் விழாக்கள் திமுக கட்சியினர் மற்றும் அரசு சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டிச.24ம் தேதி திரைத்துறை சார்பில் "கலைஞர் 100" விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது. இவ்விழாவில் கமல், ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்க ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துவிட்டனர். மேலும் பல பிரலபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தநிலையில், நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தும் அழைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலுக் அஜித் விழாக்களில் கலந்து கொள்வதில்லை, மேலும் விஜய் அரசியல் கட்சி தொடங்கபோவதாக கூறிவருகிறார்கள், இந்தநிலையில் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Tags :

Share via