குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை-பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

by Staff / 11-02-2023 04:17:22pm
குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை-பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்கிறார். பிப்ரவரி 18ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவியிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.பின்னர், ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 19ஆம் தேதி கோவையில் இருந்து மீண்டும் புறப்பட்டு முர்மு டெல்லி செல்கிறார்.
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். திரௌபதி முர்மு வருகையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

 

Tags :

Share via

More stories

Logo