மோடியின் சாதனை விளக்க ஓவியம்: 60 மணி நேரத்தில் வரைந்த மாணவர்கள்

by Editor / 06-10-2021 10:42:06am
மோடியின் சாதனை விளக்க ஓவியம்: 60 மணி நேரத்தில் வரைந்த மாணவர்கள்

பிரதமர் மோடியின் சாதனை திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 90 திட்டங்களை உள்ளடக்கிய ஓவியத்தை, 60 மணி நேரத்தில் மாணவர்கள் வரைந்துள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின், 20 ஆண்டு மக்கள் பணியை பெருமைப்படுத்தும் விதமாக, ஓவியம் வரையும் நிகழ்ச்சி திருப்பூரில் நடந்தது. பிரதமரின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், 90 திட்டங்களை உள்ளடக்கிய பிரமாண்ட ஓவியத்தை, 60 மணி நேரத்தில் நிப்ட் - டீ கல்லுாரியை சேர்ந்த, எட்டு மாணவர்கள் வரைந்துள்ளனர். ஓவியத்தில், 45 ஆயிரம் கலவை பேப்பர் கூழ், 30 கிலோ பசை மற்றும் 3 கிலோ வண்ண பெயின்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via