தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் தங்கி இருக்கும்….

by Admin / 26-08-2021 01:18:29pm
தேவைப்பட்டால் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் தங்கி இருக்கும்….

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையக் கட்டுப்பாடு தற்போது வரை அமெரிக்க ராணுவத்திடமே உள்ளதாக அந்நாட்டு ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியல் டெய்லர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை மிகவும் ஆபத்தில் உள்ளவர்களாக கருதப்படும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்களை அந்நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறப்போவதாக அமெரிக்க ராணுவம் முன்பு தெரிவித்திருந்த நிலையில், தேவைப்பட்டால் அதன் பிறகும் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் தங்கி இருக்கும் எனவும் டெய்லர் கூறியுள்ளார்.
 
ஒட்டுமொத்தமாக 88 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via