ஆஸ்திரேலியா சிட்னி நகர் கடற்கரையில், இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற பாண்டி கடற்கரையில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் .உயிரிழந்தவர்களில் 11 பேர் பொதுமக்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட சுமார் 29 பேர் காயமடைந்துள்ளனர் ..அவர்கள் ,சிட்னியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யூத மத விழாவான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளை முன்னிட்டு இந்த நிகழ்வு நடந்தது .இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது ..இது யூத சமூகத்தை குறி வைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்துள்ளனர் ..இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் இருவரில் ஒருவர் காவல்துறை நாள் சுட்டுக் கொல்லப்பட்டார் ..மற்றொருவர் கைது செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் ,மருத்துவமனையில் உள்ளார் .மூன்றாவது நபர் எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா ...என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு வாகனத்தில் இருந்து வெடி பொருட்களை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழப்பு செய்து உள்ளனர்.
Tags :



















