கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
நெல்லைமாவட்டம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்கு வீரவநல்லூர், பகுதியை சேர்ந்த சக்திவேல்முருகன் என்பவருக்கும் செங்குளத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 2017
ஆம் ஆண்டு கரம்பையிலிருந்து பொட்டல் செல்லும் ரோட்டின் அருகே உள்ள செங்கமால் முன்பு சக்திவேல்முருகன் நின்று கொண்டு இருந்த போது அங்கு வந்த விஜய், விகாஷ் (31), மன்னார் கோவில், குடியிருப்பு தெருவை சேர்ந்த ரகுபதி (29), தெற்கு வீரவநல்லூர், அழகப்பபுரத்தை சேர்ந்த பார்த்திபன் @ பாரதி (26), மேல செங்குளம், வடக்கு தெருவை சேர்ந்த நாராயண பெருமாள் (28), கண்ணன் (59), மகாராணி (54) ஆகியோர் சேர்ந்து சக்திவேல்முருகனை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.12.2024 இன்று விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் எதிரிகளான விகாஷ், ரகுபதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்தும், பார்த்திபன், நாராயண பெருமாள், கண்ணன், மகாராணி ஆகிய நான்கு பேரையும் விடுதலை செய்தும் தீர்பளித்துள்ளார். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு எதிரியான விஜய் என்பவர் இறந்துவிட்டார்.
Tags : கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை