காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களான காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நூற்பாலையில் பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த டிம்பு மஜ்கி, பீகாரைச் சேர்ந்த கோமல் குமாரி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags :