மழை வெள்ள பாதிப்புகளை பாரவையிட முதல்வர் இன்று வருகை .

by Editor / 21-12-2023 08:41:13am
மழை வெள்ள பாதிப்புகளை பாரவையிட முதல்வர் இன்று வருகை .

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். காலை 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் முதலமைச்சர், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கார் மூலம் சென்று ஆய்வு மேற்கொள்வார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்க உள்ளார். கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

 

Tags : மழை வெள்ள பாதிப்புகளை பாரவையிட முதல்வர் இன்று வருகை .

Share via