பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நவீன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிசந்திப்பு

by Admin / 21-12-2025 04:07:50pm
 பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நவீன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிசந்திப்பு

இன்று புதுச்சேரியில் பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நவீன் முதலமைச்சர் என். ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பிற்கு பிறகு முதலமைச்சர் ரங்கசாமி, தாங்கள் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாகவே இருப்பதாகவும் புதுச்சேரி வளர்ச்சி குறித்து பேசியதாகவும் தெரிவித்தார். என் ஆர் காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி வரும் தேர்தலில் தொடரும் என்று பாஜக மாநில தலைவர் வி பி ராமலிங்கம் உறுதி செய்தார். புதுச்சேரி அ.தி.மு.கவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் என்றும் வரும் 2026 தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமியின் தலைமையில் மீண்டும் புதுச்சேரியில் ஆட்சி அமையும் என்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் மற்றும் கட்சிப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நவீன் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிசந்திப்பு
 
Tags :

Share via