இன்று தலைமைச்செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ பிரதிநிதிகளுடன் அமைச்சா்கள் பேச்சுவாா்ததை,
இன்று தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் தமிழக அரசின் அமைச்சர்கள் குழு இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறது. அமைச்சர்கள் எ.வ .வேலு, தங்கம் தென்னரசு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய மூன்று அமைச்சர்கள் பேச்சு வார்த்தைநடத்துகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 2026 முதல் கால வரைரற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ -ஜியோ அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசு இந்த பேச்சு வார்த்தையை முன்னெடுத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் ,காலி பணியிடங்களை நிரப்புதல் , தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல் போன்ற முக்கிய கோரிக்கைகள் இப்பச்சு வார்த்தையில் முன் வைக்கப்பட உள்ளது. மாவட்ட தலைநகரங்களில் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று ஜாக்டோ- ஜியோ நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து இந்த பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
Tags :



















