ஒடிசாவில் போட்டியிட மறுக்கும் காங்., வேட்பாளர்

by Staff / 04-05-2024 02:29:21pm
ஒடிசாவில் போட்டியிட மறுக்கும் காங்., வேட்பாளர்

தேர்தலுக்கு செலவு செய்ய பணம் இல்லை எனக்கூறி ஒடிசாவில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார். பூரி மக்களவை தொகுதியில் சுச்சரிதா மொஹாந்தியை காங்கிரஸ் களமிறங்கியது.
இந்நிலையில், கட்சியானது தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்காததால் பிரசார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கட்சியின் நிதியுதவி இல்லாமல் போட்டியிடுவது கடினம் என்பதால் தேர்தலில் களமிறங்க சுச்சரிதா மொஹாந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். சூரத், இந்தூரை தொடர்ந்து ஒடிசாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட மறுத்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo