அமைச்சரவையையும் அரசு ஊழியர்களையும் இரண்டு கண்களாக பார்ப்பதில் மகிழ்ச்சி-முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

by Admin / 08-02-2026 10:11:51pm
அமைச்சரவையையும் அரசு ஊழியர்களையும் இரண்டு கண்களாக பார்ப்பதில் மகிழ்ச்சி-முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்

இந்த தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சென்னை வி எம் சி ஏ மைதானத்தில் பிரம்மாண்டமான நன்றி அறிவிப்பு மாநாடு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அண்மையில் அறிவித்தற்காக இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. பாராட்டு விழாவில் ஏற்புரை நிகழ்த்திய முதலமைச்சர், அரசு ஊழியர்களின் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது நாணயத்தின் இரண்டு பக்கம் போல அரசும் அரசு ஊழியர்களும் இணைந்து செயல்பட்டால் தான் எதனையும் செய்ய இயலும்.. என்றும் ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல அது ஒரு தொண்டு என்றும் நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள் உங்களின் கண்ணீர் துளிகளை துடைக்கவே கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் ..அமைச்சரவையையும் அரசு ஊழியர்களையும் இரண்டு கண்களாக பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டார். மத்திய பாஜக அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டிற்கு நிதி நெருக்கடியை உருவாக்குவதாகவும் இவ்விழாவில் குறிப்பிட்டார் .தமிழக முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 

 

Tags :

Share via

More stories