விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.3993 கோடி ஒதுக்கீடு

by Staff / 20-03-2023 11:18:04am
விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.3993 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யும் அவர், தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம். விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.3993 கோடி ஒதுக்கீடு. பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், நடப்பு கல்வியாண்டில், மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via