கள்ளச்சாராயம் பதுக்கிய தொழிலாளி கைது

by Staff / 12-07-2023 05:08:05pm
கள்ளச்சாராயம் பதுக்கிய தொழிலாளி கைது வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி. எஸ். பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார். இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாழப்பாடி அடுத்த மலை யாளப்பட்டி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாரா யத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். இதை விற்பனை செய்வ தற்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தொழி லாளி நாச்சி (வயது 49) என்ப வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via

More stories