நவ.13, 14, 27, 28 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்

by Editor / 14-09-2021 02:50:27pm
நவ.13, 14, 27, 28 தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் நவம்பர் மாதம் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.13, 14 மற்றும் 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்றவற்றை பொதுமக்கள் செய்துகொள்ளலாம்.

மாவட்ட வாரியாக முகாம்கள் நடத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு முகாம்களிலும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நான்கு நாள்களும் முகாம்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via