மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு... பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

by Editor / 15-04-2025 01:17:43pm
மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு... பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மத்திய - மாநில உறவுகளை மேம்படுத்தும் பரிந்துரைகளை வழங்கும் என்றும் கூறினார்.மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய - மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார். மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும் என்றும் இந்தியாவும் வலிமை பெறும் என்றும் கூறினார்.

இதனை உணர்ந்து மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருவதாகவும் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவின் முக்கிய பரிந்துரைகள் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.


 

 

Tags :

Share via