உயர்நிலைக் குழு தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் vs நயினார் நாகேந்திரன்.. தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

by Editor / 15-04-2025 01:12:32pm
உயர்நிலைக் குழு தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் vs நயினார் நாகேந்திரன்.. தமிழக சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த உயர்நிலைக் குழு தீர்மானத்தின் மீது காரசாரமாக விவாதம் நடந்தது.5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், “மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன; மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டியுள்ளது. நீட் தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாக உள்ளது. நீட் மூலம் பொதுக்கல்வி முறையைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

 

Tags :

Share via