பிரபல கலை இயக்குநர் திடீர் மறைவு

by Staff / 25-10-2022 11:01:30am
 பிரபல கலை இயக்குநர் திடீர் மறைவு

தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் கலை இயக்குநர்கள். இதில் முக்கிய கலை இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டவர் சந்தானம். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் மூலம் கலை இயக்குநராக பிரபலமானவர் சந்தானம்.அதன்பிறகு 'தெய்வ திருமகள்' 'இறுதி சுற்று' 'சர்க்கார்' 'தர்பார்' ஆகிய திரைப்படங்களில் கலை இயக்குநராக பணியாற்றினார். மேலும், மகான், ஜகமே தந்திரம், சர்கார் ஆகிய படங்களுக்கு ப்ரொடக்ஷன் டிசைனராகவும் சந்தானம் பணிபுரிந்திருக்கிறார். இந்த நிலையில் மாரடைப்பால் சந்தானம் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 50. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via