5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற பயங்கரம் 2 பேர் கைது

கோவாவின் வாஸ்கோ நகரில் போலீசார், முராரி குமார், உபனேஷ்குமார் ஆகிய குற்றவாளிகளை கைது செய்தனர். கடந்த நாள், வாஸ்கோ நகரில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே சிறுமி சடலமாக கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. அப்போது அந்த இடத்தில் இருந்த 20 கட்டிட தொழிலாளர்களை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இரண்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் முன்பு சிறுமியின் தாயை பலாத்காரம் செய்ய முயன்ற போது, தந்தை வந்து காப்பாற்றியுள்ளார். அங்கிருந்து இருவரும் தப்பியுள்ளனர். இந்த நிலையில், சிறுமியை வியாழக்கிழமை இரவு, கடத்திச் சென்ற குற்றவாளிகள், கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் வைத்து பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். குற்றவாளிகள் இருவரும் வாஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
Tags :