ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் உட்பட 4 பேர் கைது; 22 கிலோ பறிமுதல்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, அரக்கோணம் ரயில் நிலைய புதிய நடை மேம்பாலம் மற்றும் பழனிப்பேட்டை இரட்டை கண் வாராவதி அருகே சந்தேகப்படும்படியாக வந்த 4 வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து, அந்த 4 நபர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கேசாபாக் (34), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரகுமார் நாயக்(40), புதுக்கோட்டையை சேர்ந்த இம்ரான் (23), திருப்பூரை சேர்ந்த சஞ்சய்குமார் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும்,அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில்13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இவர்கள் ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.இதைத்தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்படுகிறது.கஞ்சா எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல்,அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமையில் பாதுகாப்பு படையினர் அரக்கோணம் வழியாக சென்ற பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது,ஜார்கண்ட் மாநிலம் ஜாம்செட்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் சோதனை நடத்தினர். இதில்,கேட்பாரற்று கிடந்த 2 பைகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அதில் 9 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து,கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர்,
கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்தது யார்? எங்கிருந்து எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த
Tags : ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் உட்பட 4 பேர் கைது; 22 கிலோ பறிமுதல்: