சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார்

by Admin / 13-01-2023 10:08:47pm
சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார்

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பாக நிகழ்த்த பெறும்சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை தீவுத்திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார்.40 வகையான கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. நையாண்டி மேளம்,பறையாட்டம்.கரகாட்டம்,காவடியாட்டம்.புரவியாட்டம்,மயிலாட்டம்,ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,வில்லுப்பாட்டு  என தமிழரின் பாரமபரிய விளையாட்டுக்களை இளைய சமுதாயம் கண்டு களித்து நம் கலைகளைத்தெரிந்து கொள்ளவும் பழம் மரபுகவல மீட்டுருவாக்கம் செய்யும்முகமாக இக்கலைவிழா நடத்தப்பெறுகிறது இன்றிலிருந்து காணும் பொங்கலான 17ஆம் தேதி வரை மாலை 6மணிமுதல் 9 மணிவரை தி.நகர் நடேசன் பூங்கா,பெசன்ட் நகர்எலியட்ஸ் கடற்கரை,திருவான்மியூர் கடற்கர,பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா,கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம்,மைலாப்பூர் நாகேஸ்வராவ்பூங்கா,இராயபுரம் ராபின்சன் பூங்கா,சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானம்,சிவன் பூங்கா,கே.கே.நகர்,அண்ணாநகர் கோபுரபூங்கா,வளசரவாக்கம் ராமகிஷ்ணா கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா,,எழும்பூர் அருங்காட்சியகம்,அம்பத்தூர் எஸ்.வி.விளையாட்டு மைதானம்  டு ஜெபூங்கா,எழும்பூர் அருங்காட்சியகம்,அம்பத்தூர் எஸ்.வி.விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில்  சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவைக்கண்டு இன்புறலாம் இந்நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு,தங்கம் தென்னரசு,ராஜகண்ணப்பன்,கீதாஜீவன்,மேயர் பிரியா,கனிமொழி,எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேருரை ஆற்றினார்
 

Tags :

Share via

More stories

Logo