திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருவமான மு. க .ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். வெளியிட்டு பேசிய முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நான் பலமுறை சொன்னது போன்று அரசியல் கூட்டணி மட்டுமல்ல கொள்கை கூட்டணி கூட்டணி எண்ணிக்கையில் தொகுதிகளை பகிர்ந்து கொண்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது அந்த அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை 234 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 70 தொகுதிகளை தோழமைக் கட்சிகளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கட்சிகளின் வாரியாக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் முதலில் நான் அறிவிக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் - 164 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சி - 28 தொகுதிகள்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - 10 தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 8 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5 தொகுதிகள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 4 தொகுதிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2 தொகுதிகள்
மனிதநேய மக்கள் கட்சி - 2 தொகுதிகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2 தொகுதிகள்
மனிதநேய ஜனநாயக கட்சி - 1 தொகுதி
முக்குலத்தோர் புலிப்படை - 1 தொகுதி
எஸ்.டி.பி.ஐ. - 1 தொகுதி
தமிழர் தேசம் கட்சி - 1 தொகுதி என எங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தோழமைக்கு ஒதுக்கிய தொகுதிகளுள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஆக மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.
தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்தியாவின் முதன்முதலாக ஆட்சி அமைத்த மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களைப் பேரறிஞர் அண்ணாவின் சார்பிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சார்பிலும் நான் அறிவிக்கிறேன்.
கன்னியாகுமரி- மகேஷ் ,நாகர்கோவில் -எஸ் ஆஸ்டின், ராதாபுரம்- அப்பாவு,பாளையங்கோட்டை -அப்துல் வஹாப் ,திருநெல்வேலி -சுப்பிரமணியன் ,ஆலங்குளம் -பால் மனோஜ் பாண்டியன் ,தென்காசி -கலை கதிரவன், வாசுதேவநல்லூர் -ராஜா ,கோவில்பட்டி - கருணாநிதி, ஓட்டப்பிடாரம் தனி- ராமஜெயம், திருச்செந்தூர் -அனிதா ராதாகிருஷ்ணன் ,தூத்துக்குடி -கீதா ஜீவன், விளாத்திகுளம் -ஜிவி மார்க்கண்டேயன் ,முதுகுளத்தூர் - ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம்- காதர்பாட்சா முத்துராமலிங்கம் ,பரமக்குடி - கதிரவன் ,திருச்சுழி -தங்கம் தென்னரசு அருப்புக்கோட்டை- கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், சாத்தூர் -கடற்கரை ராஜ், ராஜபாளையம்- தங்கபாண்டியன், கம்பம் -ராமகிருஷ்ணன் ,போடிநாயக்கனூர் -பன்னீர்செல்வம் , ஆண்டிப்பட்டி- மகாராஜன், திருமங்கலம்,-சேடப்பட்டி மணிமாறன், திருப்பரங்குன்றம் -கிருத்திகா தங்கபாண்டி ,மதுரை மேற்கு -ரகு பாலாஜி ,மதுரை மத்திய- பழனிவேல் ராஜன் ,மதுரை வடக்கு- கோ.தளபதி சோழவந்தான் தனி -வெங்கடேசன் மதுரை கிழக்கு - மூர்த்தி மானாமதுரை தனி -தமிழரசி ,திருப்பத்தூர் -பெரிய கருப்பன் ,ஆலங்குடி - மெய்ய நாதன் திருமயம் - எஸ் ரகுபதி ,புதுக்கோட்டை - முத்துராஜா விராலிமலை- செல்லபாண்டியன் பேராவூரணி- அசோக்குமார், பட்டுக்கோட்டை- அண்ணாதுரை , ஓரத்தநாடு- வைத்தியலிங்கம் தஞ்சாவூர் -சண்முகநாதன் , திருவையாறு -துரை ,சந்திரசேகரன் -கும்பகோணம் சாக்கோட்டை- அன்பழகன், திருவிடைமருதூர் - கோவிசெழியன் திருவாரூர் பூண்டி- கலைவாணன், மன்னார்குடி -முனைவர் டி
ஆர்.பி .ராஜா வேதாரணியம்- புகழேந்தி ,பூம்புகார் --நிவேதா முருகேசன் ,புவனகிரி -துரை சரவணன், ராசிபுரம் - மதிவேந்தன் ,வீரபாண்டி -, சேலம் தெற்கு- லோகநாதன் ,சேலம் வடக்கு -ராஜேந்திரன், சங்ககிரி- மணிகண்டன், எடப்பாடி -காசி, மேட்டூர் -மிதுன் சக்கரவர்த்தி ,ஏற்காடு தனி -ரேவதி ,மாதேஸ்வரன் கெங்கவல்லி- சின்னத்துரை, சங்கராபுரம்- உதயசூரியன் ரிஷிவந்தியம் -வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை -ஜி .ஆர். வசந்தவேல் ,திருக்கோவிலூர் -பொன் கௌதம சிகாமணி, விக்கிரவாண்டி- அன்னியூர் சிவா ,விழுப்புரம் தனி- கௌதம் திராவிட மணி, செஞ்சி -கே .எஸ். மஸ்தான் வந்தவாசி -அம்பேத்குமார், செய்யாறு -ஜோதி ,ஆரணி -மகாலட்சுமி கோவர்த்தனன், கலசப்பாக்கம்- சரவணன் ,கீழப் பெண்ணாத்தூர் - திருவண்ணாமலை --ஏ.வா .வேலு ,செங்கம் -கிரி , அரூர் -சண்முகம் பாப்பிரெட்டிப்பட்டி -, பாலக்கோடு செந்தில்குமார் ,ஓசூர் -, கேப்பனஹல்லி -சீனிவாசன் ,பருகூர் -, திருப்பத்தூர்- நல்லதம்பி, ஜோலார்பேட்டை -கவிதா தண்டபாணி, ஆம்பூர்- வில்வநாதன் ,கீழ் வைத்தியனாம் குப்பம் -ராஜேஸ்வரி மோகன் காந்தி, அணைக்கட்டு- நந்தகுமார் ,வேலூர் - ஆற்காடு- ஈஸ்வரப்பன் ,ராணிப்பேட்டை- வினோத் காந்தி, காட்பாடி -, காஞ்சிபுரம் -நித்யா சுகுமார் ,உத்திரமேரூர் -சுந்தர் ,மதுராந்தகம் -- பொன்மலர் ,செங்கல்பட்டு- கார்த்திக் தண்டபாணி ,தாம்பரம் -கிருத்திகா தேவி ,ஆலந்தூர் தா.மு. அன்பரசன், சோழிங்கநல்லூர் -அரவிந்த் ரமேஷ் ,மயிலாப்பூர் -வேலு ,தியாகராய நகர் -ராஜா அன்பழகன், சைதாப்பேட்டை- சுப்பிரமணியன், விருகம்பாக்கம்- பிரபாகராஜா, அண்ணா நகர் -சிற்றரசு ,ஆயிரம் விளக்கு -எழிலன் நாகநாதன் சேப்பாக்கம் -உதயநிதி ஸ்டாலின் ,துறைமுகம் பி.கே .சேகர்பாபு ராயபுரம் -சுபேர் கான் ,எழும்பூர் தனி-தமிழன் பிரசன்னா ,திருவிக நகர் -தனி கே .எஸ். ரவிச்சந்திரன் ,வில்லிவாக்கம்- கார்த்திக் மோகன் ,பெரம்பூர் -ஆர்.டி. சேகர் ,டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் -ஜே .ஜே. எபிநேசர் ,மாதவரம் -சுதர்சனம் ,அம்பத்தூர்- அபூபூர்ணிமா, மதுரவாயல்- காரம்பாக்கம் கணபதி ,ஆவடி- நாசர், பூந்தமல்லி- கிருஷ்ணமூர்த்தி ,திருவள்ளூர்- ராஜேந்திரன், கும்முடிபூண்டி- கோவிந்தராஜன், கொளத்தூர்- முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
Tags :



















