நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே. பி. சர்மா ஒலி காத்மாண்டுவில் கைது
பிரபல ராப் பாடகரும் பொறியாளருமான பாலேந்திர ஷா நேபாளத்தின் 47வது பிரதமராக பதவி ஏற்றதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் கே. பி. சர்மா ஒலி காத்மாண்டுவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜென் இசட் தலைமுறை போராட்டங்களின் போது அதனை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் சுமார் 77 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான குற்றவியல் அலட்சியம் மற்றும் கொலை குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்மா ஒலியுடன் சேர்த்து முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் கைது செய்யப்பட்டுள்ளார். பாலேந்திர ஷாவின் புதிய அமைச்சரவை இந்த போராட்டங்கள் குறித்த விசாரணை அறிக்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேபாள அரசியலில். இதுவரை ஆதிக்கும் செலுத்திய கட்சி வீழ்ச்சி அடைந்து இளைஞர்களின் சக்தி உச்சமடைந்ததை தொடர்ந்து நேபாளத்தில் புதிய மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















