மிகவும் ஆபத்தான நிலையில் ஆப்கன் குழந்தைகள்: காப்பாற்றுமா உலக நாடுகள்?
ஆப்கனில் பள்ளி செல்லும் பிள்ளைகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில், அடக்கு முறையைக் கையாள மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் தலிபான்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காத அந்நாட்டு மக்கள், உயிர் பிழைத்தால் போதும் என, அண்டை நாடுகளுக்கு தப்பியோடுகின்றனர். ஆப்கனில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையால் பெரியவர்களே அல்லாடி கொண்டிருக்கும் வேளையில் சிறுவர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.
இதுகுறித்து ஆப்கனில் ஆய்வு செய்த, ஐ.நா., சபையின் சிறுவர்கள் நிதியமான யுனிசெப், ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போதைய மோதலும் பாதுகாப்பின்மையும் வறட்சியை மேலும் அதிகரித்திருக்கிறது.விலைவாசி கடுமையாக ஏறிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் அனைத்து குழந்தைகளும் மிகுந்த பயந்துடன் நாட்களை கடந்து வருகின்றனர்.
குறிப்பாக 40 லட்சம் சிறுவர்கள் கட்டாயப்படுத்தி பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு உள்ளார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் சிறுவர்களின் நலனுக்காக நிதி அனுப்பும் அமைப்புகள் நிதியை நிறுத்துகின்றன. உலக நாடுகள் ஒருபோதும் ஆப்கன் சிறுவர்களைக் கைவிடக் கூடாது என யுனிசெப் தெரிவித்துள்ளது.
Tags :