தூக்கத்தில் கனவு காணுகிறார் அண்ணாமலை - டி.ஆர்.பி ராஜா

by Staff / 11-04-2024 05:29:57pm
தூக்கத்தில் கனவு காணுகிறார் அண்ணாமலை - டி.ஆர்.பி ராஜா

கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கரும்புக்கடை பகுதியில் ரமலான் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கோவையில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலை 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறுகிறார். தூங்கிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது. அவர் கனவு காணட்டும். பாஜக கட்சி சமுதாயத்திற்கு எதிரானது. சமூக விரோதிகளின் கூடாரமாக பா.ஜ.க உள்ளது. ஒட்டுமொத்த விரோதிகள் அந்த இயக்கத்தில் தான் இருக்கிறார்கள்.

 

Tags :

Share via

More stories