கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதற்கு அதிகாரப்பூர்வமாக தடை
அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் 2028- ஆம் ஆண்டு நடைபெற உள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு பெண்கள் பிரிவில் திருநங்கைகள் அதாவது ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்கள் பங்கேற்பதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கடையானது சர்வதேச ஒலிம்பிக் கூறிவு வெளியிட்ட புதிய தகுதிக் கொள்கையின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் பங்கேற்க உயிர் ரீதியான பெண்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் என ஐ.ஓ.சி அறிவித்துள்ளது. பெண்கள் பிரிவில் பங்கேற்க விரும்பும் அனைத்து வீராங்கனைகளும் ஒரு முறை மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய மரபணு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் இதில் எஸ் ஆர் ஒய் மரபணு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதாவது எஸ் ஆர் ஒய் பாசிட்டிவ் அவர்கள் பரிசோதனையில் தெரியப்பட்டால், பெண்கள் பிரிவில் பங்கேற்க தகுதியற்றவர்களாக தீர்மானிக்கப்படுவார்கள். போட்டிகளில் நேர்மை பாதுகாப்பு மற்றும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ ஓ சி தலைவர் திருஷ்டி கோ வென்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விளையாட்டுத்துறை சார்ந்த நிர்வாக உத்தரவுகளுடன் இது ஒத்துப்போவதாகவும் கூறப்படுகிறது .இந்த தடையானது ஒலிம்பிக் மற்றும் ஐ.ஓ.சி நடத்தும் அனைத்து போட்டிகளுக்கும் பொருந்தும் என்றும் அடிமட்ட அளவிலான பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கு இது பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.
Tags :


















