கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி

உத்தரபிரதேச மாநிலம் தாகுர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சல்மா என்ற பெண், தனது கணவர் முன்னாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, தனது மனைவியை வீட்டிற்கு திரும்பி வரும்படி சமாதானம் செய்யச் சென்று கணவர் கெஞ்சியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த மனைவி கணவரை கீழே தள்ளி, அவரது நாக்கை கடித்து துப்பினார். அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட்ட முன்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சல்மாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :