சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு மூதாட்டியை கொலைசெய்த கல்லூரி மாணவன் கைது

by Editor / 08-04-2022 09:57:12pm
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைபட்டு மூதாட்டியை கொலைசெய்த கல்லூரி மாணவன் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த பட்டத்தாள் என்ற மூதாட்டி கடந்த 6ஆம்  தேதி அன்று மர்மமான முறையில் வீட்டிலிருந்த கட்டிலில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் 2 பவுன் வளையல் ஆகியவை கம்மல் உள்ளிட்ட 5 பவுன் தங்கப்பொருட்கள் திருடப்பட்டிருந்தது. மூதாட்டியின் உடலில் சிறுசிறு காயங்கள் இருந்ததால் வேப்பூர் போலீசார் ரகசியமாக விசாரணை செய்து வந்தனர்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த  முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன் சூர்யா என்பவர் தான் இந்த கொலையை செய்து நகைகளை திருடி அந்தப்பகுதி அடகு கடையில் அடகு வைத்தது உள்ளிட்டவைகளை  அடகு கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் மூதாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகைகளை திருடி சென்று, 22 ஆயிரத்திற்கு புதிய செல்போன், 15 ஆயிரம் ரூபாய்க்கு புதிய ஆடைகள், தனியாக வாடகைக்கு வீடு என உல்லாசமாக இருந்துள்ளார் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via