சென்னை அனைத்து பள்ளிகள்-கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை விடுமுறை
தென்மேற்கு வங்கக் கடையில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்து வரும் தொடர் மற்றும் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சிய ரஷ்மி சித்தார்த் ஜக டே பிறப்பித்துள்ளார்.
திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags :



















