ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக ஏப்ரல் 6ந்தேதி வரை தம் காலக்கெடுவை நீட்டித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக ஏப்ரல் 6ந்தேதி வரை தம் காலக்கெடுவை நீட்டித்துள்ளார். சர்வதேச எண்ணை வர்த்தகத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் ஹார்முஸ் ஜல சந்தியை முழுமையாக மீண்டும் கிடக்க ஈரானுக்கு டிரம்பு வழங்கிய அவகாசம் ஏப்ரல் ஆறாம் தேதி இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது ஈரான் அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்நாட்டின் எரிசக்தி ஆலைகள் மற்றும் மின் உற்பத்திய நிலையங்கள் மீதான தாக்குதலை ட்ரம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் இருப்பினும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை எனில் ஏப்ரல் மாதத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது ஈரான் தரப்பில் பத்து சரக்கு கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேச்சுவார்த்தை சுலபமாக நடைபெறுவதாக ட்ரம் தெரிவித்துள்ளார் ஆனால் ஈரான் தரப்பில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மோதல் சூழலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதோடு கப்பல்nபோக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ,எகிப்து மற்றும் துருக்கி ஈடுபட்டுள்ளது.
Tags :



















